தொடர் நெருக்கடிகளுக்குள்ளே எதிர் நீச்சல் போடும் ஒரு சமூகத் தலைவன் ரிஷாட்.

சமூகம் சார்ந்தும், தனது கட்சி சார்ந்தும், அரசியல் சார்ந்தும் சிந்திக்க விடாது தொடர் தொல்லைகளை இனவாதிகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.

சாதாரன மனிதன் வருடத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை சோதிக்கப்படுவது யதார்த்தம்.

ஆனால் இவரோ வருடம் முழுவதும் சங்கடங்களையே சுமந்து கொள்கின்றார்.

ஒரு புரம் தனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று மக்களின் தேவை..
மறுபுறம் இனவாதிகளின் நெருக்குவாரம்..
இன்னொரு புறம் எதிர்க்கட்சிகளின் சதிவலை..
மற்றுமொரு புறம் கூடவே உள்ளவர்களின் துரோகத்தனம்..

இவை தவிர்ந்து தன்மூலமாகப் பயன்பெற்ற படித்தவர்க்கத்தின் மூர்க்கத்தனமான விமர்சனங்கள்..

பேரினவாதிகளின் காவிப்பயங்கரவாதம்... விமல்,கம்பன்பில போன்றோரின் அடக்குமுறை உணர்வு..

ஹிரு, தெரண, சுவர்ணவாகினி போன்ற தொலைக்காட்சிகளின் கடும்போக்குவாத ஊடகப் பயங்கரவாதம் என எத்தனை சோதனைகள்..

இவைகளை எல்லாம் தாண்டி....
மனைவி முகம் மூடுகிறாள் என்பதை கருத்திற் கொண்டு.. பிறப்பிலிருந்தே கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த அவளின் வங்கிக் கணக்குகள் சொத்துக்கள் முதற் கொண்டு அத்தனையையும் விசாரணை எனும் பெயரில் முடக்கும் சதிவலைகள்..

சகோதரர்களை ஒன்றன் பின் ஒன்றாக பழிதீர்க்கும் வேட்டைகள் என தொடர்கிறது..

இதற்குப் பின்னால் அடிமைத்தனமான ஒரு வரலாற்றை பெரும்பான்மை செதுக்கிறது... அதற்குச் சில பச்சோந்திகள் பக்க வாத்தியம் பாட ஆரம்பிக்கின்றன..
சமூகத்தின் செல்லாக் காசுகள் எல்லாம் ஒரு கூடையில் அடைக்கப்படுகிறார்கள் இந்த சமூகம் அவர்களிடத்தில் தஞ்சமடையுமா??

இனிவரும் காலம் சிறுபான்மை சமூகத்தின் சார்பில் யாரும் தங்கள் குரல்களை உயர்த்தக் கூடாது எனும் வலராறு செதுக்கப்படுகிறது.

எரித்தாலும் வக்காலத்து வாங்கி வரும் ஈனப்பிறவிகள் தங்கள் குடும்பத்தில் ஒரு சடலம் எடுப்பார் கேட்பாரின்றி தெருக்கலில் நாற்றம் எடுக்கும் போதுதான் கொஞ்சம் புத்தி தெளிய வாய்ப்பிருக்கும்...

இந்த றிஷாட் தன்னைக் குறித்து மட்டுமே சிந்திக்க வேண்டும் சமூகம் குறித்து இனி ஒருபோதும் கனவிலும் நினைக்கக் கூடாது எனும் இனவாதிகளின் எண்ணம் ஒரு போதும் இந்தத் தலைவனிடம் பழிக்காது..

இன்ஷா அல்லாஹ் சோதனைகள் எமக்கான சாதைனைகளாகவும் வரலாறாகவும் மாறும்..

துரோகமும் அடிமைத்தனமும் இந்த சமூகத்தின் சாபக்கேடாகும்..
தகனத்திற்குத் துணை போகும் தறுதலைகளை எமது மையவாடிகளை விட்டு அப்புறப் படுத்தி வரலாற்றை திருப்பி எழுதுவோம்.